ஆசிய விளையாட்டு போட்டி: வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணி

இறுதிப்போட்டியில் இந்தியா - தென் கொரியா அணியை சந்தித்தது.
Archery indian womens team
Published on: 

ஜப்பானில் நடந்து வரும் 20-வது ஆசிய விளையாட்டு திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.

நேற்று முன்தினம் 4 தங்கப்பதக்கத்தை அள்ளிய இந்தியாவுக்கு போட்டியின் 13-வது நாளான நேற்று சற்று ஏமாற்றமாக அமைந்தது. வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் மட்டுமே நமக்கு கிடைத்தன.

இந்தநிலையில், இன்று நடைபெற்ற பெண்கள் ரிகர்வ் வில்வித்தை இறுதிப்போட்டியில் இந்தியா - தென் கொரியா அணியை சந்தித்தது. இந்திய பெண்கள் ரிகர்வ் அணியின் அங்கிதா பகத், கீர்த்தி, அனில் மொஹோட் ஆகிய வீராங்கனைகள் நிதானத்தையும் துல்லியத்தையும் வெளிப்படுத்தி சிறப்பான ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு 4-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தனர்.

இந்த வெற்றியின் மூலம், பெண்கள் அணி ரிகர்வ் பிரிவில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கம் என்ற பெருமையை இந்த அணி பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com