ஆசிய விளையாட்டு போட்டி: தடகளத்தில் ஒரு தங்கத்துடன் 24 பதக்கங்கள் வென்றது இந்தியா

4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு 3 பதக்கங்கள் கிடைத்தன.
ஆசிய விளையாட்டு போட்டி
ஆசிய விளையாட்டு போட்டி
Published on: 

ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்ற தடகள போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. இதில் இந்தியா ஒரு தங்கம், 9 வெள்ளி, 14 வெண்கலத்துடன் மொத்தம் 24 பதக்கங்கள் பெற்றுள்ளன.

2022-ம் ஆண்டை விட குறைவு

என்றாலும் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டை பொறுத்தவரையில் குறைவானதாகும். 22-ம் ஆண்டு 6 தங்கம், 14 வெள்ளி, 9 வெண்கல பதக்கங்களுடன் 29 பதக்கங்கள் வென்றிருந்தது.

மொத்தமாக இந்தியா இதுவரை 6 தங்கம், 21 வெள்ளி, 25 வெண்கல பதக்கங்களுடன் 52 பதக்கங்கள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது.

சீனா முதல் இடம்

சீனா 143 தங்கம், 62 வெள்ளி, 49 வெண்கலத்துடன் மொத்தம் 254 பதக்கங்கள் வென்று முதல் இடத்தில் உள்ளது. ஜப்பான் 45 தங்கம், 71 வெள்ளி, 67 வெண்கலகத்துடன் மொத்தம் 183 பதக்கங்கள் வென்று 2-வது இடத்தில் உள்ளது. கொரியா 3-வது இடத்திலும், உஸ்பெகிஸ்தான் 4-வது இடத்திலும், தாய்லாந்து 5-வது இடத்திலும் உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com