

ஆசிய விளையாட்டு போட்டியில் குத்துசண்டையில் இந்திய வீரர் அங்குஷ் பங்கல் (80 கிலோ பிரிவு), வீராங்கனை பர்வீன் ஹூடா ( 65 கிலோ பிரிவு) ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர்.
நரேந்தர் பெர்வால் (90 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவு) அரை இறுதியில் தோற்றதால் வெண்கலப் பதக்கம் கிடைக்கிறது.
இன்று காலை நடைபெற்ற அரை இறுதியில் லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ பிரிவு) கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த நடாலியா போக்டனோவாவை எதிர்கொண்டார்.
இதில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற லவ்லினா 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதன் மூலம் குத்துச்சண்டையில் 3-வது வெள்ளிப் பதக்கம் உறுதியானது. லவ்லினா இறுதிப் போட்டியில் சீன வீராங்கனையை சந்திக்கிறார்.
முன்னதாக நடந்த அரை இறுதியில் இந்திய வீராங்கனை பிரியா (60 கிலோ பிரிவு) அரை இறுதியில் சீன வீராங்கனையிடம் தோற்றார். இந்த தோல்வியால் அவருக்கு வெண்கல பதக்கம் கிடைக்கிறது.
ஆண்களுக்கான 90 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் கபில் பொகரியா- உஸ்பெகிஸ்தானின் துராபெக் கபிபுல்லாயேவுடன் மோதினார்.
இதில் கபில் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதன்மூலம் அவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.