ஆசிய தடகளம் - தமிழக வீரர் வெண்கலம்

400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இதுவரை 5 தங்கம், ஒரு வெள்ளி உட்பட 10 பதக்கங்களை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஆசிய தடகளம் - தமிழக வீரர் வெண்கலம்
Published on

தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீரர் சந்தோஷ் வெண்கல பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.  4-வது நாளான இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் 49.09 வினாடிகளில் இலக்கை எட்டினார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இதுவரை 5 தங்கம், ஒரு வெள்ளி உட்பட 10 பதக்கங்களை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. 11 தங்கத்துடன் ஜப்பான் முதல் இடத்திலும், 5 தங்கம், 7 வெள்ளி பெற்று சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com