ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தான், ஓமனுக்கு பதிலாக வங்கதேசம், கஜகஸ்தான் சேர்ப்பு

பாகிஸ்தான் அணி பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி இந்தியா வர மறுத்தது. இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சீனாவுடன் மோதுகிறது.
ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தான், ஓமனுக்கு பதிலாக வங்கதேசம், கஜகஸ்தான் சேர்ப்பு
Published on

புதுடெல்லி:

8 அணிகள் இடையிலான 12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 7-ந் தேதி வரை பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் அணி பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி இந்தியா வர மறுத்தது.

இதனால் அந்த அணிக்கு பதிலாக வங்கதேசம் கலந்து கொள்கிறது. அத்துடன் ஓமன் அணியும் கடைசி நேரத்தில் விலகி இருக்கிறது. அந்த அணிக்கு மாற்றாக கஜகஸ்தான் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி 29-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் சீனாவுடன் மோதுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com