ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடைபெற்று வருகிறது.
pv sindhu
Published on: 
Summary

ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, கனடாவின் வென் யு ஜாங் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-8, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இந்தப் போட்டி 28 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

இரண்டாவது சுற்றில் பி.வி.சிந்து ஜப்பானின் ரிகோ உடன் மோத உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com