ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் அனந்த்ஜீத் சிங் நருகா

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் நடந்து வருகிறது.இதில் ஸ்கீட் பிரிவில் இந்தியாவின் அனந்த்ஜீத் சிங் நருகா தங்கம் வென்றார்.
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் அனந்த்ஜீத் சிங் நருகா
Published on

ஷிம்கென்ட்:

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆடவருக்கான ஸ்கீட் பிரிவில் இந்தியாவின் அனந்த்ஜீத் சிங் நருகா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

அவர் 57 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com