ஆசிய விளையாட்டு: மல்யுத்தத்தில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் அமன் ஷெராவத்

மல்யுத்தப் பிரிவில் இந்தியா பெறும் 2வது தங்கப்பதக்கம் இதுவாகும்.
aman serahwat
Published on: 
Summary

ஆசிய விளையாட்டு போட்டியில் மல்யுத்தத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் தங்களது அபார திறமையால் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

அமன் ஷெராவத், இறுதிப்போட்டியில் வட கொரியா வீரரை 11-7 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

இப்போட்டியில் மல்யுத்தப் பிரிவில் இந்தியா பெறும் 2வது தங்கப் பதக்கம் இதுவாகும்.

இதற்கு முன் 2014 மற்றும் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதே 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் யோகேஷ்வர் தத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் தங்கம் வென்றிருந்தனர். நேற்று சுஜித் கல்கல் தங்கம் வென்றார்.

ஒட்டுமொத்தமாக மல்யுத்தத்தில் பதக்கம் பெறும் 4வது வீரர் அமன் ஷெராவத் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com