ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் பிரதாப் சிங் தோமர்

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் பிரதாப் சிங் தோமர் தங்கம் வென்றார்.
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் பிரதாப் சிங் தோமர்
Published on

ஷிம்கென்ட்:

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் பிரதாப் சிங் தோமர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

ஆசிய சாம்பியன்ஷிப் அரங்கில் பிரதாப் சிங் கைப்பற்றிய 3வது தங்கம் இதுவாகும். இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com