

ஆசிய விளையாட்டு போட்டியில் ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அபய் சிங், அனாஹத் சிங் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இந்தப் போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும்.
இன்று ஸ்குவாஷ் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றன. இந்தியாவின் அபய் சிங், மலேசிய வீரர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மலேசிய வீரர் 11-9, 11-5, 11-5 என்ற புள்ளிக்கணக்கில் வென்று தங்கப் பதக்கம் வென்றார்.
இந்தியாவின் அபய் சிங் 0-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இதேபோல, மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங் 0-3 என்ற கணக்கில் மலேசியாவின் சிவசங்கரி சுப்பிரமணியத்திடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி இதுவரை 4 தங்கம், 14 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்களைப் பெற்றுள்ளது.