ஆசிய விளையாட்டு: பாகிஸ்தான் பந்து வீச்சை சிதறடித்த திலக் வர்மா, அபிஷேக் ஷர்மா

ஜப்பானில் இன்று தொடங்கிய ஆசிய விளையாட்டு டி20 இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் விளையாடி வருகின்றன.
India vs Pakistan - Asian Games
Published on: 
Summary

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் இறுதி போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 20 ஓவரில் 211 ரன்களை குவித்துள்ளது.

ஜப்பானில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கிய ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் விளையாடி வருகின்றன.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி 15 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் அதிரடியாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் பெரிதளவில் ரன்கள் அடிக்காமல் வெளியேறிய நிலையில், ஷிவம் துபே மற்றும் திலக் வர்மா ஜோடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

தொடர்ந்து, அதிரடியாக விளையாடிய திலக் வர்மா, 22 பந்துகளில் 51 ரன்கள் குவித்து, பாகிஸ்தான் பவுலர்கள் வீசிய பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார்.

இதையடுத்து ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது.

பாகிஸ்தான் தரப்பில் அகமது மினஸ் மற்றும் அகமது டானியல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பாகிஸ்தான் பவுலர்களான சயீம் அபூப் மற்றும் அப்ரர் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com