

ஜப்பானில் நடைபெற்று வரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில், பெண்களுக்கான வலுதூக்குதல் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 67 கிலோ எடைப் பிரிவில் அவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் கஸ்தூரி ராஜாமணி இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். அவருக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.