ஆசிய விளையாட்டு: வில்வித்தையில் 2 வெள்ளி வென்ற இந்திய அணி

ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகிறது.
team india
Published on: 
Summary

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையில் இந்தியாவுக்கு இன்று 2 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன.

ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் தங்களது அபார திறமையால் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.

ரிகர்வ் கலப்பு அணி பிரிவில் வெள்ளி

இந்நிலையில், வில்வித்தை ரிகர்வ் கலப்பு அணி பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. கும்கும் அனில் மோகோத் , தீரஜ் பொம்மதேவரா ஆகியோர் அடங்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் சீனாவிடம் 3-5 என்ற கணக்கில் (34-38, 35-37, 37-36, 37-37) தோற்று 2-வது இடம்பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

ரிகர்வ் ஆண்கள் அணி பிரிவில் வெள்ளி

இதேபோல், வில்வித்தை ரிகர்வ் ஆண்கள் அணி இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, இறுதிப்போட்டியில் தென்கொரியாவை எதிர்கொண்டது.

இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா, யஷ்தீப் போகே மற்றும் நீரஜ் சவுகான் ஆகிய 3 பேர் கொண்ட அணி, தென் கொரியாவின் லீ வூ-சியோக், கிம் ஜெ டியோக் மற்றும் கிம் வூ ஜின் ஆகியோர் அடங்கிய அணியை எதிர்கொண்டனர்.

இறுதியில் 56-56, 50-57, 54-56 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. 1-5 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது. வில்வித்தையில் இதுவரை 8 பதக்கங்கள் கிடைத்தன.

X

Maalai Malar
www.maalaimalar.com