14 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய கூடைப்பந்து போட்டி சென்னையில் நாளை தொடக்கம்

முதல் பரிசு பெறும் அணிக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
14 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய கூடைப்பந்து போட்டி சென்னையில் நாளை தொடக்கம்
Published on

மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் சென்னையில் கடந்த 21 ஆண்டுகளாக மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.

அகில இந்திய கூடைப்பந்து

இந்த ஆண்டு முதல் முறையாக அகில இந்திய கூடைப்பந்து போட்டியை அந்த கிளப் நடத்துகிறது. இந்த போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை (21-ந்தேதி) தொடங்குகிறது. 26- ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.

இதன் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, வருமான வரி, ஐ.ஓ.பி, ஐ.சி.எப், இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் (சென்னை), கேரள போலீஸ், கேரள மின்சார வாரியம் ( திருவனந்தபுரம்), பாங்க் ஆப் பரோடா (பெங்களூரு) ஆகிய 8 அணிகளும், பெண்கள் பிரிவில் தெற்கு ரெயில்வே விளையாட்டு சங்கம், ரைசிங் ஸ்டார், எஸ்.டி.ஏ.டி., எலைட் (சென்னை), கேரள மின்சார வாரியம் (திருவனந்தபுரம்), தென் மத்திய ரெயில்வே (ஐதராபாத்), மத்திய ரெயில்வே விளையாட்டு சங்கம் (மும்பை) ஆகிய 6 அணிகளும் ஆக மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.

பரிசு தொகை

லீக் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடக்கிறது. ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு எம். கோபால கிருஷ்ணன் நினைவு கோப்பையுடன் ரூ. 1 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும். 2 முதல் 4-வது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ. 75 ஆயிரம், ரூ. 50 ஆயிரம், ரூ. 25 ஆயிரம் கிடைக்கும்.

பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு எல். கிருஷ்ண மூர்த்தி நினைவு கோப்பையுடன் ரூ. 75 ஆயிரம் பரிசு தொகையும், 2 முதல் 4-வது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.50 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.

பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி, கார்போனாடிக் ஆகியவை இந்த போட்டிக்கு ஸ்பான்சராக உள்ளன. நாளை மாலை 6 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.

இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் புரவலர் கே.எத்திராஜ், தலைவர் எம்.எம்.டி.ஏ. கோபி, துணைத்தலைவர் எஸ்.எஸ். குமார், செயலா ளர் எம். கனக சுந்தரம், பொருளாளர் கே. ரகுராமன், அமைப்பு குழுவை சேர்ந்த அருள் வெங்கடேஷ், தனபால், ஆந்திரபதி, ஜெயச்சந்திரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com