திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோல்காபூர் மகாலட்சுமிக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்

மகாலட்சுமி தாயார் கோவிலில் நவராத்திரி உற்சவம் நடந்து வருகிறது. பட்டு வஸ்திரங்கள் ஊர்வலமாக எடுத்து வந்து மகாலட்சுமி தாயாருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோல்காபூர் மகாலட்சுமிக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்
Published on

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மராட்டிய மாநிலம் கோல்காபூரில் உள்ள மகாலட்சுமி தாயார் கோவிலில் நவராத்திரி உற்சவம் நடந்து வருகிறது. அதையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, அவரின் மனைவி சொர்ணலதாரெட்டி ஆகியோர் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பணம் செய்வதற்காக கோல்காபூருக்கு சென்றனர்.

கோவிலுக்கு சென்ற அறங்காவலர் குழு தலைவர், மனைவியை கோவில் அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். அதன்பிறகு அறங்காவலர் குழு தலைவர் தம்பதியினர் பட்டு வஸ்திரங்களை ஊர்வலமாக எடுத்து வந்து மகாலட்சுமி தாயாருக்கு சமர்ப்பித்து, மகாலட்சுமி தாயாரை தரிசனம் செய்தனர். அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர். அவர்களுக்கு கோவில் பிரசாதம் வழங்கினர்.

அப்போது திருமலை-திருப்பதி தேவஸ்தான டெல்லி தகவல் மைய உள்ளூர் ஆலோசனைக் குழு தலைவர் வேமிரெட்டி பிரசாந்தி ரெட்டி தம்பதியர் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com