திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் 13-ந்தேதி தொடங்குகிறது

13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் நடக்கிறது.உற்சவ நாட்களில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம், ஆஸ்தானம் நடக்கிறது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் 13-ந்தேதி தொடங்குகிறது
Published on

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் நடக்கிறது. உற்சவ நாட்களில் ஆண்டாளுக்கு காலை திருமஞ்சனம், மாலை ஆஸ்தானம் நடக்கிறது.

22-ந்தேதி ஆண்டாள் சாத்துமுறை, காலை 9.30 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை உற்சவர்களான கோவிந்தராஜசாமி, ஆண்டாளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம், மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரை கோவிந்தராஜசாமி, ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக அலிபிரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ஆஸ்தானமும், சிறப்புப்பூஜைகளும் நடத்தப்படுகிறது.

பின்னர் மாலை அங்கிருந்து புறப்பட்டு ராம் நகர் குடியிருப்பு, கீதா மந்திரம், ஆர்.எஸ்.மாட வீதியில் உள்ள விக்னசாச்சாரியார் கோவில், சின்னஜீயர் மடம் வழியாக கோவிலுக்கு திரும்புகிறார்கள்.

மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com