திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு திருவிழா

திருஏடு வாசிப்பு திருவிழா 7 நாட்கள் நடைபெற்றது. அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளினார்.
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு திருவிழா
Published on

திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 9-ந்தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெற்றது. விழா காலங்களில் தினசரி மாலை 3 மணிக்கு திருஏடு வாசிப்பு நடந்தது. கடந்த 23-ந்தேதி திருக்கல்யாணம் நடந்தது.

விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் மாலையில் சிகர நிகழ்ச்சியான பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு திருவிழா நடந்தது. இதனை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள்சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் தொடங்கி வைத்தார். பின்னர் வைகுண்ட மகராஜன்மற்றும் ஆனந்த் குழுவினர் பட்டாபிஷேக திருஏடு வாசித்தனர். இரவில் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி, பதியை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவில் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com