தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை வழிபாடு

நால்வருக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.பக்தர்கள் கலந்து கொண்டு மாணிக்கவாசகரை தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை வழிபாடு
Published on

தஞ்சாவூர்:

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நால்வருக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதேப்போல் தஞ்சாவூர் மேலவீதி கொங்கணேஸ்வர சுவாமி கோவிலில் குருபூஜை வழிபாடை முன்னிட்டு மாணிக்கவாசகர் உட்பட நால்வருக்கும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. சிவனடியார்கள் திருவாசகம் பாடல் பாடினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாணிக்கவாசகரை தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com