தை மற்றும் மாட்டுப்பொங்கல் வைக்க உகந்த நேரம்...

பொங்கல் பண்டிகையையொட்டி வீடுகள் தோறும் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள்.மகர ராசியில் சூரிய பகவான் பகல் 11.58 மணிக்குத்தான் பிரவேசிக்கிறார்.
தை மற்றும் மாட்டுப்பொங்கல் வைக்க உகந்த நேரம்...
Published on

தமிழர் திருநாளான தை பொங்கல் பண்டிகை நாளை (செவ்வாய்கிழமை) கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி வீடுகள் தோறும் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது என்பதை பார்ப்போம்...

அன்று சூரிய உதயம் காலை 6.42 மணிக்கு நடைபெறுகிறது. நல்லநேரம் காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் இருந்தாலும், மகர ராசியில் சூரிய பகவான் பகல் 11.58 மணிக்குத்தான் பிரவேசிக்கிறார்.

எனவே மகர சங்கராந்திப் பொங்கல் என்ற அடிப்படையில், பொங்கல் வைக்க பகல் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் நல்ல நேரம் உள்ளது. அந்த நேரத்தில் குரு ஓரையும் வருவதால் பொங்கல் வைக்க உகந்த நேரமாகும்.

மாட்டுப் பொங்கல் வைக்க உகந்த நேரம்

வீட்டுப் பொங்கலுக்கு மறுநாள், மாட்டுப்பொங்கல் வைத்துக் கொண்டாட வேண்டும். அந்த திருநாள் வருகிற 15.1.2025 (புதன்கிழமை) வருகிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மாட்டுப்பொங்கல் வைக்க உகந்த நேரமாகும்.

முதலில் மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து மாடுகளின் கழுத்தில் பூமாலையும், கரும்பு மாலையும் கட்டி அலங்கரித்து, பின் பொங்கல் வைத்து வழிபடுங்கள். மாடுகளுக்கு கண்டிப்பாக பொங்கல் நைவேத்தியம் வழங்க வேண்டும். அதில் கொஞ்சத்தை குடும்ப உறுப்பினர்களும் சாப்பிட வேண்டும். அதன் மூலம் லட்சுமி கடாட்சம் பெருகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com