நாகராஜா கோவிலில் தைத்திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி

ஆண்டுதோறும் தைத்திருவிழா நடைபெறும்.கால்நாட்டு விழா நேற்று காலையில் கோவிலில் நடந்தது.
நாகராஜா கோவிலில் தைத்திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் தைத்திருவிழா நடைபெறும். அதன்படி வருகிற ஜனவரி மாதம் 18-ந் தேதி தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான கால்நாட்டு விழா நேற்று காலையில் கோவிலில் நடந்தது.

நிகழ்ச்சியில் கோவில் நம்பூதிரி கேசவன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் கால் நாட்டப்பட்டது. இதில் கண்காணிப்பாளர் ஆனந்த் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com