சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திரண்ட பக்தர்கள்

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யாவை வழிபட்டனர்.பக்கர்களுக்கு இனிப்பு, சந்தனம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திரண்ட பக்தர்கள்
Published on

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் நேற்று ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அய்யாவழி பக்தர்கள் அதிகாலை முதலே குவியத் தொடங்கினர். அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, சென்னை, கோவை மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் வருகை தந்தனர்.

அவர்கள் முத்திரிகிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பால், பழம், பன்னீர், தேங்காய், பூ ஆகியவற்றை சுருளாக வைத்து அய்யாவை வணங்கினர். இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு உகப்படிப்பு, வாகன பணிவிடை, நித்தப்பால் தர்மம், மதியம் உச்சிபடிப்பு, அன்ன தர்மம் நடந்தது.

பக்கர்களுக்கு இனிப்பு, சந்தனம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவை வழங்கப்பட்டது. தொடர்ந்து சாமிதோப்பு குரு பால ஜனாதிபதி அய்யா வைகுண்டசாமியின் அற்புதங்கள் குறித்து பக்தர்களிடையே ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.

இரவு 7 மணிக்கு பிச்சிப்பூவால் அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனத்தில் அய்யா எழுந்தருளி பதி மற்றும் ரதவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யாவை வழிபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com