சாமிதோப்பு தலைமைப்பதியில் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம்

குரு பால ஜனாதிபதி பக்தர்கள் இடையே ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.அன்ன வாகனத்தில் அய்யா எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சாமிதோப்பு தலைமைப்பதியில் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம்
Published on

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம். ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அய்யாவழி பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் முத்திரிகிணற்றில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து பால், பழம், பன்னீர், தேங்காய், பூ ஆகியவற்றை சுருளாக வைத்து அய்யாவை வணங்கி சென்றனர்.

இதையொட்டி நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு உகப்படிப்பு, வாகன பணிவிடை, நித்தப்பால் தர்மம், மதியம் உச்சிபடிப்பும் பின்னர் அன்னதர்மம் போன்றவை நடந்தது. குரு பால ஜனாதிபதி பக்தர்கள் இடையே ஆன்மிக சொற்பொழிவாற்றினார். இரவு 7 மணிக்கு பிச்சிப் பூவால் அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனத்தில் அய்யா எழுந்தருளி பதி மற்றும் ரதவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சென்னை, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களை ேசர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் ரத வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com