விண்ணம்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவிலில் சிவன் மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் நிகழ்வு தொடங்கியது

இந்த கோவில் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 14-ந்தேதி வரை சிவன்பெருமான் திருமேனி மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் நிகழ்வு நடைபெறும்.
விண்ணம்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவிலில் சிவன் மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் நிகழ்வு தொடங்கியது
Published on

காட்பாடி தாலுகா வள்ளிமலையை அடுத்த விண்ணம்பள்ளி கிராமத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சூரியன் வழிப்பட்ட திருத்தலமாக இந்த கோவில் கருதப்படுகிறது.

ஆண்டு தோறும் இந்த கோவிலில் பங்குனி மாதம் 23-ந் தேதி முதல் 7 நாட்கள் சிவன்பெருமான் திருமேனி மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்.

சிவபெருமானை சூரியன் தரிசிப்பதால் இதை காணும் பக்தர்களுக்கு ஏழுபிறவிகளில் செய்த வினைகள் தீரும் என்பது ஐதீகமாக உள்ளது.

அதன்படி இந்தாண்டு பங்குனி மாதம் 23-ந் தேதி முதல் சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள் சிவன் மீது படும் நிகழ்வு காலை 6 மணி முதல் 6.30 வரை நடைபெற்றது. திரளான பக்தர்கள் இந்த நிகழ்வின்போது தரிசனம் செய்தனர். சித்திரை முதல்நாள் வரை இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com