சுசீந்திரம் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி சாமிகள் வாகன பவனி இன்று நடக்கிறது

ஆடி கற்கடக ஸ்ரீ பலி விழா இன்று மாலை நடைபெறுகிறது. ஸ்ரீ பலி முடிந்த பிற்பாடு கோவிலில் நடைபெறும் நித்திய காரிய பூஜைகள் நடைபெறும்.
சுசீந்திரம் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி சாமிகள் வாகன பவனி இன்று நடக்கிறது
Published on

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் நாள் அன்று கற்கடக ஸ்ரீபலி விழா நடத்தப்படுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டுக்கான ஆடி கற்கடக ஸ்ரீ பலி விழா இன்று (திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது.

இதையொட்டி மாலை 5.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சிவனும், கருட வாகனத்தில் பெருமாளும் இருக்கும்படி அமரச் செய்து கோவில் சுற்றுபிரகாரத்தில் மூன்று முறை ஸ்ரீபலி விழா நடக்கிறது.

ஸ்ரீ பலி முடிந்த பிற்பாடு கோவிலில் நடைபெறும் நித்திய காரிய பூஜைகள் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com