ஆஞ்சநேயர் சாமிக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது.

ஆஞ்சநேயர் சாமிக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆஞ்சநேயர் சாமிக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது.
Published on

குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலாக சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இங்கு 18 அடி உயரம் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது.

பக்தர்கள் நினைத்த காரியத்தை நடத்தி கொடுக்கும் வல்லவராக திகழ்வதால் இந்த ஆஞ்சநேயர் சாமியை காண தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். சிறப்பு பெற்ற ஆஞ்சநேயர் சாமிக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்திற்கு ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். மேலும், மாதம் தோறும் ஆஞ்சநேயர் சாமிக்கு மூலம் நட்சத்திரத்தன்று வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

அதுபோல் நேற்றும் மூலம் நட்சத்திரத்தையொட்டி 18 அடி உயரம் உள்ள ஆஞ்சநேயர் சாமிக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com