ஸ்ரீகாளஹஸ்தி பட்டாபி ராமர் கோவிலில் சீதா-ராமர் திருக்கல்யாணம்

சீதா-ராமருக்கு திருக்கல்யாண உற்சவத்தை அர்ச்சகர்கள் நடத்தி வைத்தனர். பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஜெய் ஸ்ரீராம் என பக்தி கோஷம் எழுப்பினர்.
ஸ்ரீகாளஹஸ்தி பட்டாபி ராமர் கோவிலில் சீதா-ராமர் திருக்கல்யாணம்
Published on

ஸ்ரீகாளஹஸ்தி:

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலின் துணைக் கோவிலான ஸ்ரீகாளஹஸ்தி பட்டாபி ராமர் கோவிலில் நேற்று ராம நவமி விழா நடந்தது. அதையொட்டி உற்சவர்களான சீதா-ராமருக்கு பலவண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மேடையில் எழுந்தருளச் செய்தனர்.

முன்னதாக கணபதி பூஜை மற்றும் பல்வேறு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு தீப தூப நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க, சீதா-ராமருக்கு திருக்கல்யாண உற்சவத்தை அர்ச்சகர்கள் நடத்தி வைத்தனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஜெய் ஸ்ரீராம் என பக்தி கோஷம் எழுப்பினர்.

திருக்கல்யாண உற்சவத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, செயல் அலுவலர் எஸ்.வி நாகேஸ்வரராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com