சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டு முறை

வீட்டில் இருக்கும் விநாயகர் படத்திற்கு அருகம்புல் மாலை சாற்றுங்கள்.மந்திரத்தை 21 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டு முறை
Published on

இந்த சதுர்த்தி தினத்தன்று காலையில் பிரம்ம முகூர்த்த வேலையில் எழுந்து குளித்து முடித்து பிறகு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு உங்கள் விரதத்தை தொடங்க வேண்டும். இந்த பூஜை விரதம் இருந்து செய்வது மிகவும் சிறப்பு. முடியாதவர்கள் எளிமையான உணவை உட்கொண்டு விரதம் இருக்கலாம்.

இதற்கு நமக்கு 11 அகல் விளக்குகள் தேவை. இதற்கு புதிதாக வாங்க வேண்டும் என்று இல்லை வீட்டில் இருக்கும் பழைய அகலையே கூட தேய்த்து சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளலாம். அடுத்து 11 அரச இலை அல்லது வெற்றிலை இரண்டில் எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

அதேபோல் விநாயகருக்கு பிடித்தமான நைவேதியம் ஏதாவது செய்து கொள்ளுங்கள். இந்த வழிபாடு செய்வதற்கான நேரமும் மிகவும் முக்கியம். இதை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலை 6 மணி முதல் 7.30 மணி வரை, அல்லது 8.15-ல் இருந்து 9.15 வரையும், காலை 10.45 முதல் 11.45 வரையும், மாலை 5.30 மணி முதல் 8.30 வரையும் இந்த நேரத்தில் உங்கள் வசதிக்கேற்ப ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்து இந்த பூஜை செய்து கொள்ளுங்கள்.

இந்த பூஜை செய்ய நீங்கள் எடுத்து வைத்திருக்கும் 11 இலையும் 11 அகல் விளக்கையும் பூஜை அறையில் கிழக்கு அல்லது வடக்கு இரண்டில் ஏதாவது ஒரு திசையில் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல அனைத்து அகலையும் வெற்றிலை அல்லது அரச இலை மேல் வைத்து நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபமேற்றி வைத்து விடுங்கள்.

வீட்டில் இருக்கும் விநாயகர் படத்திற்கு அருகம்புல் மாலை சாற்றுங்கள். அதன் பிறகு அவருக்கு பிடித்த நைவேதியத்தை வைத்து வெற்றிலை பாக்கு, பூ, பழம், தேங்காய் என சகலமும் வைத்து பூஜையை உங்களால் முடிந்த வரையில் சிறப்பாக செய்யுங்கள். எல்லாம் செய்த பிறகு இந்த மந்திரத்தை படிக்க வேண்டும்.

ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்திஹி ப்ரசோதயாத் என்ற இந்த மந்திரத்தை 21 முறை பாராயணம் செய்ய வேண்டும். அதன் பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை முடித்து விடுங்கள். இந்த தீபம் குறைந்தது ஒரு மணி நேரம் வரையாவது எரியும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இந்த பூஜை செய்யும் நாளில் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வருவது மேலும் நல்ல பலன்களை கொடுக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com