சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நிறைவு

கடந்த மாதம் 12-ந் தேதி பூச்சொரிதல் விழா தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நிறைவு
Published on

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 12-ந் தேதி பூச்சொரிதல் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 9-ந் தேதி பங்குனி கடைசி வார ஞாயிற்றுக் கிழமையையொட்டி 5-வது பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

இதில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் டிராக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் படத்தை வைத்து பூக்களை தட்டு மற்றும் கூடைகளில் எடுத்து ஊர்வலமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.

மேலும் பாதயாத்திரையாகவும், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர். இதைதொடர்ந்து இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா நிறைவு பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com