ராஜகோலத்தில் ரெங்கமன்னார்!

உற்சவரான பெருமாள், பேண்ட்- சட்டை அணிந்து காட்சி தருகிறார். காலில் செருப்பும் அணிந்திருக்கிறார்.
ராஜகோலத்தில் ரெங்கமன்னார்!
Published on

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் மூலவரான ரெங்கமன்னார் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்கிறார். தாயார் ஆண்டாள் என்ற திருநாமத்துடனும், கோதைநாச்சி என்ற பெயருடனும் அருள்பாலிக்கிறார். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இந்த ஆலயம் 90-வது தலமாக திகழ்கிறது.

இவ்வாலயத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஆகிய மூவரும் ஒரே ஸ்தானத்தில் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டுமே. இங்குள்ள உற்சவரான பெருமாள், பேண்ட்- சட்டை அணிந்து காட்சி தருகிறார்.

திருவில்லிபுத்தூரில் உள்ள ரெங்கமன்னார், வலது கையில் பெந்துகோல் (தற்காப்பு கோல்), இடது கையில் செங்கோல், இடுப்பில் உடைவாள் வைத்து ராஜகோலத்தில் இருக்கிறார். காலில் செருப்பும் அணிந்திருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com