நாராயணவனம், அப்பலாயகுண்டா கல்யாண, பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவில்களில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.
ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேஸ்வரருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தபோது எடுத்தபடம்.
ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேஸ்வரருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தபோது எடுத்தபடம்.
Published on

திருப்பதி மாவட்டம் நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வந்தது. விழாவின் 9-வது நாளான நேற்று காலை பல்லக்கு உற்சவம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரர், சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. ஸ்நாபன திருமஞ்சனம் முடிந்ததும் அங்குள்ள கோவில் புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது புஷ்கரணியில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் நீரில் 3 முறை மூழ்கி புனித நீராடினர். அதைத்தொடர்ந்து இரவு பிரம்மோற்சவ விழா கொடியிறக்கம் நடந்தது. அத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

அதேபோல் அப்பலாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் நடந்து வந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான நேற்று காலை பல்லக்கு உற்சவம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

அதன் பிறகு உற்சவர்களுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. ஸ்நாபன திருமஞ்சனம் முடிந்ததும் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது திரளான பக்தர்கள் நீரில் மூழ்கி புனித நீராடினர். பின்னர் இரவு கொடியிறக்கம் நடந்தது. அத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com