கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூர் தர்காவில் சந்தனம் அரைக்கும் பணி தொடங்கியது

19-ந்தேதி கந்தூரி விழா தொடங்குகிறது. 21-ந்தேதி சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது.
கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூர் தர்காவில் சந்தனம் அரைக்கும் பணி தொடங்கியது
Published on

நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் வருகிற 19-ந்தேதி சின்ன ஆண்டவர் என்று அழைக்கப்படும் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப்பின் கந்தூரி விழா தொடங்குகிறது.

தொடர்ந்து வருகிற 21-ந்தேதி அன்னாரின் புனித சமாதியில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது.

விழாவையொட்டி நேற்று சந்தனம் அரைக்கும் பணி நாகூர் தர்காவில் தொடங்கியது.

இந்த பணி நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டிகளால் துவா ஓதப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com