திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் லட்சதீப விழா

கேரளாவில் உள்ள கோவில்களில் நேற்று திருக்கார்த்திகை தீப விழா.லட்ச தீப விழாவின்போது கோவில் ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் லட்சதீப விழா
Published on

திருவட்டார்:

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கேரள முறைப்படி பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கேரளாவில் உள்ள கோவில்களில் நேற்று திருக்கார்த்திகை தீப விழா நடந்தது. அதேபோல் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நேற்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி நேற்று மாலை அலங்கார தீபாராதனைக்கு முன்னதாக கோவில் பிரகார விளக்கணி மாடங்களில் உள்ள விளக்குகளுக்கு ஒளியேற்றும் லட்ச தீப விழா நடந்தது. சிறுமிகள், பக்தர்கள், பெண்கள் போட்டி போட்டு விளக்கேற்றினர். லட்ச தீப விழாவின்போது கோவில் ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com