கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை

நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படுகிறது.நெற்கதிர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை
Published on

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில்இந்த ஆண்டுக்கான தை மாத நிறைபுத்தரிசி பூஜை வருகிற 5-ந்தேதி அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலான சுபமுகூர்த்த வேளையில் நடக்கிறது. இதையொட்டி அன்றுஅதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக் கட்டாக கட்டி கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டுவந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

பின்னர் அந்த நெற்கதிர் கட்டுகளை கோவில் மேல் சாந்தி தலையில் சுமந்தபடி மேள தாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது.பின்னர் அந்த நெற்கதிர் கட்டுகளை பகவதி அம்மன் முன் நெற்கதிர் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜைகளை கோவில் மேல் சாந்திகள் நடத்துகிறார்கள்.

சிறப்பு பூஜை முடிந்தபிறகு நெற்கதிர்கள்அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் நெற்கதிர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த நெற்கதிர்களை பக்தர்களுக்குகோவில் மேல்சாந்தி வழங்குகிறார்.

நிறை புத்தரிசி பூஜை வழிபாட்டுடன் கோவிலில் விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங் கார தீபாராதனை, உஷ பூஜை, பந்திரடி பூஜை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை போன்றவை நடக்கிறது. மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவு அம்மன் பல்லக்கில் கோவிலின் உள் பிரகாரத் தில் வலம் வருதல், அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாரதனை ஆகியவை நடக்கிறது. நிறைபுத்தரிசி பூஜையை யொட்டி பகவதி அம்மனுக்கு தங்ககவசம், வைரக்கிரீடம், வைரக்கல்மூக்குத்திமற்றும் திருவாபரணங்கள் அணி விக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன்அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைகுமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com