கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது

23-ம்தேதி ஜெபமாலை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.24-ந்தேதி திருவிழா திருப்பலி, முதல் திருவிருந்து விழாவும் நடக்கிறது.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
Published on

கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் தமிழகத்தில் புகழ் பெற்ற கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்றாகும்.

இந்த திருத்தலத்தில் திருவிழா முன்பு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 10 நாட்கள் நடைபெறும். இந்த மாதத்தில் மீன் தொழில் அதிகமாக இருந்து வந்ததால் தேர்பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதில் சிரமம் இருந்து வந்தது. இதன் காரணமாக செப்டம்பர் மாதம் நடைபெற்று வந்த திருவிழா பொதுமக்களின் வசதிக்காக டிசம்பர் மாதத்துக்கு மாற்றி வைக்கப்பட்டது.

இருப்பினும் பாரம்பரிய முறைப்படி நடந்து வந்த செப்டம்பர் மாத திருவிழாவை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 2 நாட்கள் மட்டும் 'தேதிப்படி திருவிழா' என நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேதிப்படி திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதனையொட்டி அன்று மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. 24-ந் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி, முதல் திருவிருந்து விழாவும் நடக்கிறது. பின்னர் மாலை 5.30 மணிக்கு நற்கருணை பவனி, அதைதொடர்ந்து மறையுரை நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்தந்தை ஆன்றனி ஆல்காந்தர், பங்கு பேரவை துணைத்தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக் மற்றும் இணை பங்கு தந்தையர்கள், பங்கு பேரவையினர் அனைத்து அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com