கமுதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மாசிக்களரி திருவிழா

மாசி, பங்குனி மாதங்களில் குலதெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.சுடச்சுட கமகமக்கும் கறி விருந்து.
கமுதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மாசிக்களரி திருவிழா
Published on

பசும்பொன்:

ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் மாசி, பங்குனி மாதங்களில் குலதெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அவ்வாறு நடைபெறும் விழாக்க ளில் நேர்த்திக்கடனாக ஆட்டுக்கிடாய்களை சுவா மிக்கு பலியிட்டு, பின்னர் அதன் கறியை கமகமக்கும் வகையில் சமையல் செய்து பக்தர்களுக்கு விருந்தாக படைப்பது காலம் காலமாய் நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே ஆனையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம் மன் மற்றும் கருப்பண்ண சாமி, வன்னி குலசாமி கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள சுவாமிகள் மற்றும் தேவதைகளுக்கு 17-ம் ஆண்டு மாசி களரி திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.

 இதில் சுவாமிகளுக்கு நேர்த்திக்கடனாக 51 ஆட்டு கிடாய்களைப் பலியிட்டு, 1,008 கிலோ வெள்ளாட்டுக்கறியை அதிகாலையில் சமையல் செய்து தங்களது குலதெய்வ வழிபாடு நடத்தினர். இதில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் சுடச்சுட கமகமக்கும் கறி விருந்து வைத்தனர்.

இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குவிந்த பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குலதெய்வ வழிபாடு செய்து, பின்னர் நீண்ட வரிசையில் பொறுமையாக நின்று ஆட்டுக்கிடாய் கறி விருந்தை ருசித்து சாப்பிட்டனர். பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com