பிரதோஷ காலத்தில் இவற்றை எல்லாம் செய்யக்கூடாது

சிவலிங்கத்தின் மீது சந்தனம், விபூதி, கங்கை நீர், பால் ஆகியவற்றை பூசலாம். இன்றைய தினத்தில் இறைச்சி உணவைத் தவிர்க்க வேண்டும்.
பிரதோஷ காலத்தில் இவற்றை எல்லாம் செய்யக்கூடாது
Published on

பிரதோஷங்கள் பல இருப்பினும் அவை அனைத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த பிரதோஷம் என்பது சனிப்பிரதோஷம் தான். இதற்கு மகா பிரதோஷம் என்ற பெயரும் உண்டு. சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் ஆகும்.

பிரதோஷ காலங்களில் சிவனை வணங்குவதால் நல்ல பலன் பெறலாம். அன்று காலை முதல் விரதமிருந்து மாலையில் சிவன் கோவிலுக்குச் செல்லவேண்டும். பலர் பிரதோஷ தினத்தில் விரதமிருந்து பிரதோஷ தரிசனம் கண்ட பின் தங்களின் விரதத்தை முடிப்பது உண்டு.

நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் கண்ணார தரிசித்துப் பிரார்த்தனை செய்தால் இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும். பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் பலன்கள் கிடைக்கும்.

பிரதோஷ தினத்தன்று செய்யக்கூடாத விஷயங்களை நாம் பார்ப்போம்:

பிரதோஷ விரதத்தன்று பெண்கள் சிவலிங்கத்தை தொடக்கூடாது.

பார்வதி அன்னையின் கோவத்திற்கு ஆளாகலாம் என்பதால் பிரதோஷ நாளில் பெண்கள் சிவலிங்கத்தை தொடக் கூடாது.

பிரதோஷ தினத்தன்று சிவபெருமானுக்கு மஞ்சள் படைக்கக் கூடாது.

சிவலிங்கம் ஆண்மையின் அடையாளம். அதனால் சிவலிங்கத்துக்கு மஞ்சள் பூசக்கூடாது.

அதற்குப் பதிலாக லிங்கத்தின் மீது சந்தனம், விபூதி, கங்கை நீர், பால் ஆகியவற்றை பூசலாம்.

சிவலிங்கத்திற்கு தேங்காய் தண்ணீர், சங்கு தண்ணீர், சங்கு புஷ்பம், லவங்க இலை, குங்குமம் ஆகியவற்றை படைக்கக் கூடாது. இவற்றைப் படைத்தால் சிவபெருமான் கோபமடைவார்.

பிரதோஷ தினத்தன்று சில பொருட்களை சாப்பிடக் கூடாது. பூண்டு, வெங்காயம், கத்தரிக்காய், கீரை வகைகள் சாப்பிடக் கூடாது. இறைச்சி தவிர்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com