திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவியும் பக்தர்கள்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர்.கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவியும் பக்தர்கள்
Published on

திருச்செந்தூர்:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பக்தர்கள் முருகப்பெருமானை வழிபாடு செய்து பொங்கல் திருநாளை கொண்டாடுவது பெரும்பாலான இந்துக்களிடம் வழக்கமாக உள்ளது.

அந்த வகையில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள்பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் திருச்செந்தூர் செல்கின்றனர். அவர்கள் திருச்செந்தூர் கடல் மற்றும் நாழிகிணறு தீர்த்தத்தில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும், பல சிறுவர்கள் ஆண்டி கோலமிட்டு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நாளை மறுநாள் தை 1-ந்தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கோவில் வளாகம் மற்றும் கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com