

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ராஜலட்சுமி நகரில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அமாவாசையை முன்னிட்டு உலக நன்மை மற்றும் தொழில் வளர்ச்சி வேண்டி நிகும்பலா யாகம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மகாதீபா ராதனை நடைபெற்றது. இதனையடுத்து நடைபெற்ற நிகும்பலா யாகத்தில், உயிர் மூலிகைகள், மிளகாய் வற்றல் இட்டு வழிபாடு நடைபெற்றது.
இதில் பாலகிருஷ்ணாபுரம், அனுமந்த நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அகில இந்திய இந்து மகா சபா தேசிய செயலாளரும், பீடாதிபதியுமான கிருஷ்ண மூர்த்தியார் தலைமையில் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.