மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளார் 84-வது பிறந்தநாள் விழா

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 84-வது பிறந்தநாள் விழா.அதிகாலை சுயம்பு அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளார் 84-வது பிறந்தநாள் விழா
Published on

சென்னை:

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 84-வது பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கும், சுயம்புவிற்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ரமேஷ் கலந்து கொண்டார்.

ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் செந்தில்குமார் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார். சித்தர் பீடம் வந்த ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பங்காரு அடிகளாரின் திரு வுருவப்ப டத்தினை வெள்ளி ரதத்தில் வைத்து சித்தர் பீடத்தில் வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்று மாலை கலச விளக்கு வேள்வி பூஜையை ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் தொடங்கி வைத்தார்.

நேற்று காலை ஆதிபராசக்தி அம்மனுக்கு நடைபெற்ற அபிஷேகத்தை ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் கோ.ப.அன்பழகன் துவக்கி வைத்தார். பின்னர் பங்காரு அடிகளாரின் திருவுருவ சிலையுடன் தங்கரதம் சித்தர் பீடத்தை வலம் வந்தது.

பங்காரு அடிகளாரின் பிறந்த நாளான இன்று அதிகாலை சுயம்பு அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் பங்காரு அடிகளாரின் திருவுருவப் பட மலர் அலங்கார ரத ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் பங்காரு அடிகளாரின் திருப்பாதுகைகளுக்கு பக்தர்கள் பொது பாத பூஜை செய்து தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தொழில் அதிபர் ஜெய் கணேஷ், உமாதேவி, ஆன்மீக இயக்க தலைமை செயல் அதிகாரி வழக்கறிஞர் அகத்தியன் ஆகியோர் அருட்பிரசாதம் வழங்கினார்கள்.

இன்று மாலை மக்கள் நலப்பணி விழா மற்றும் விழா மலர் வெளியிடும் நிகழ்ச்சி ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க கலை அரங்கில் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com