திருப்பதி கோவிலில் இன்று 6 மணி நேரம் தரிசனம் ரத்து

17-ந் தேதி ஆனி வார ஆஸ்தானம் நடைபெற உள்ளது.பக்தர்கள் கூடுதல் நேரம் காத்திருந்தனர்.
திருப்பதி கோவிலில் இன்று 6 மணி நேரம் தரிசனம் ரத்து
Published on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 17-ந் தேதி ஆனி வார ஆஸ்தானம் நடைபெற உள்ளது.

இதையொட்டி ஏழுமலையான் கோவில் முழுவதும் தூய்மைப்படுத்தும் ஆழ்வார் திருமஞ்சனம் பணி இன்று காலை நடந்தது.

தெலுங்கு வருட பிறப்பு ஆனிவார ஆஸ்தானம் வருடாந்திர பிரமோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகிய 4 நாட்களுக்கு மட்டும் கோவில் முழுவதும் பரிமளம் என்ற வாசனை திரவியம் மூலம் கோவில் கருவறை கொடிமரம் மற்றும் வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தப்படுகிறது.

கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி இன்று காலை 6 மணி முதல் 12 மணி வரை சுமார் 6 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் கூடுதல் நேரம் காத்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com