திருவானைக்காவலில் 108 ஓதுவா மூர்த்திகளின் தேவார திருமுறை இன்னிசை நிகழ்ச்சி

ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 108 ஓதுவா மூர்த்திகளின் தேவார திருமுறை இன்னிசை நிகழ்ச்சி.108 ஓதுவார்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
திருவானைக்காவலில் 108 ஓதுவா மூர்த்திகளின் தேவார திருமுறை இன்னிசை நிகழ்ச்சி
Published on

ஸ்ரீரங்கம்:

தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் இந்திய அரசு கலாசார அமைச்சகம் சார்பில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 108 ஓதுவா மூர்த்திகளின் தேவார திருமுறை இன்னிசை பெருவிழா நேற்று நடந்தது. இதில் 108 ஓதுவார்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பக்கவாத்திய இசை கருவிகளுடன் தேவார திருமுறை இசை நிகழ்ச்சி நடத்தினர். இதில் திருவானைக்காவல் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், திருச்சி மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் நீலமேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com