

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். சுபச்செலவு உண்டு. தொழில் ரீதியான பயணம் பலன் தரும். உத்தியோகத்தில் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்.
சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். பிரபலமானவர்களால் பிரச்சினைகள் தீரும். உடன்பிறப்புகள் வழியில் நல்ல தகவலொன்று உண்டு.
நிர்வாகத்திறமை பளிச்சிடும் நாள். நீண்ட நாளைய ஆசையொன்று நிறைவேறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். திருமணம் கைகூடும்.
நண்பர்கள் நல்ல தகவலைத் தருகின்ற நாள். நேற்றைய பிரச்சினை இன்று முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லை அகலும்.
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியங்களை பாதியில் விட்டுவிடுவீர்கள்.
அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அறிமுகம் கிடைக்கும் நாள். தடைப்பட்ட வருமானம் தானாகவே வந்து சேரும். விலகிச்சென்ற வரன்கள் மீண்டும் வரலாம்.
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். போட்டிகளைச் சமாளித்து வெற்றி காண்பீர்கள். சங்கிலித்தொடர்போல வந்த கடன்சுமை குறையும்.
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அதிகார பதவியில் உள்ளவர்கள் நட்பாவர். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு பாராட்டுக் கிடைக்கும்.
வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் ஏற்படும். கடமையில் இருந்த தொய்வு அகலும். உத்தியோக மாற்றம் உறுதியாகும்.
சகோதர வழியில் சந்தோஷச் செய்தி வந்து சேரும் நாள். இழுபறியான காரியங்கள் இனிதே முடிவடையும். பணிபுரியுமிடத்தில் கோபப்பட வேண்டாம். சேமிப்பு உயரும்.
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொலைதூரப் பயணம் உறுதியாகலாம். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும்.
வரன்கள் வாயில் தேடி வரும் நாள். வருமானம் உயரும். நீங்கள் எதிர்பார்த்த காரியமொன்று நடைபெறு வதில் தாமதம் ஏற்படலாம். பயணம் பலன் தரும்.