

செல்போன் வழித்தகவல் சிந்திக்க வைக்கும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.
விரயங்கள் கூடும் நாள். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் உங்கள் பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தேவையான பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். விவாகப் பேச்சுகள் முடிவாகும்.
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். வியாபார முன்னேற்றம் கருதி பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல்நலம் சீராக ஒரு தொகையைச் செலவிடுவீர்கள்.
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
நண்பர்களால் நன்மை ஏற்படும் நாள். விட்டுப்போன தொடர்புகள் மீண்டும் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் உண்டு.
பிரச்சினைகள் அகலும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பு உண்டு. சேமிப்பை உயர்த்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அன்னிய தேச அழைப்புகள் வரலாம்.
விருப்பங்கள் நிறைவேறும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவர்.
வரன்கள் வாயில் தேடி வந்து சேரும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.
நண்பர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. பொதுவாழ்வில் புகழ் கூடும்.
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
உதிரி வருமானங்கள் வந்து சேரும் நாள். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புண்ணிய காரியத்திற்கு பொருளுதவி செய்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.