Today Rasipalan | இன்றைய ராசிபலன் 25.8.2026: இவர்களுக்கு பணத்தேவைகள் பூர்த்தியாகும்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களைக் காணலாம்.
rasipalan
Published on

மேஷம்

பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் முன்னேற்றம் உண்டு.

ரிஷபம்

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.

மிதுனம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். அத்தியாவசியச் செலவுகளை முன்னிட்டு கைமாற்று வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். உத்தியோகத்தில் மனக்கலக்கம் அதிகரிக்கும்.

கடகம்

முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். குடும்பத்தினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தொழில் பங்குதாரர்களால் தொல்லைகள் ஏற்படலாம்.

சிம்மம்

வருமானம் அதிகரிக்கும் நாள். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்காலம் இனிமையாக வழிவகுத்துக் கொள்வீர்கள்.

கன்னி

எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.

துலாம்

தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அல்லல்கள் அகலும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.

விருச்சிகம்

நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வரும் நாள். நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் உண்டு. திருமண முயற்சி கைகூடும்.

தனுசு

உறவினர் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சனை தீரும்.

மகரம்

ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக முக்கிய முடிவெடுப்பீர்கள்.

கும்பம்

யோகமான நாள். அடுத்தவர் நலனில் எடுத்த அக்கரைக்கு ஆதாயம் கிடைக்கும். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் புதிய ஒப்பந்தம் வந்துசேரும்.

மீனம்

நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். வீடு கட்டும் பணியைத் தொடர நினைப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com