Today Rasipalan: இன்றைய ராசிபலன் 8.6.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு காரிய வெற்றி ஏற்படும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Today Rasipalan: இன்றைய ராசிபலன் 8.6.2026  - இந்த ராசிக்காரர்களுக்கு காரிய வெற்றி ஏற்படும்
Published on

மேஷம்

வருமானம் திருப்தி தரும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.

ரிஷபம்

உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிட்டும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.

மிதுனம்

முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். அயல்நாட்டிலிருந்து உத்தியோகம் சம்பந்தமான தகவல் வரலாம்.

கடகம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். வாகனங்களில் செல்லும் பொழுது விழிப்புணர்ச்சி தேவை. குடும்பத்தினர் உங்கள் மீது குறை கூறுவர்.

சிம்மம்

அலைபேசிவழி தகவலால் அனுகூலம் கிட்டும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

கன்னி

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி கைகூடும்.

துலாம்

நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும் நாள். புதிய திட்டம் தீட்டுவீர்கள். வாகன பராமரிப்பு சிந்தனை மேலோங்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

விருச்சிகம்

நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வரவு திருப்தி தரும்.

தனுசு

காரிய வெற்றி ஏற்படும் நாள். பயணங்கள் பலன் தருவதாக அமையும். தொழில் முன்னேற்றம் உண்டு. உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பம் கூடிவரும்.

மகரம்

விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலிடத்திற்கு நெருக்கமாவீர்கள்.

கும்பம்

வெளிவட்டார பழக்கம் விரிவடையும் நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். உத்தி யோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

மீனம்

நன்மைகள் நடைபெறும் நாள். நம்பிக்கைக்குரியவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். சகோதரத்தின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com