Today Rasipalan: இன்றைய ராசிபலன் 29.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு திருமணத்தடை அகலும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Rasipalan
Published on

மேஷம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவை விடச் செலவு கூடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

ரிஷபம்

திட்டமிட்ட காரியத்தில் திடீர் மாற்றம் ஏற்படும் நாள். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் ரீதியான பயணமொன்றால் லாபம் உண்டு.

மிதுனம்

ஆதாயம் அதிகரிக்கும் நாள். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. எதிர்பார்த்த காரியம் இன்று நடைபெறும்.

கடகம்

முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிறருக்குப் பொறுப்புச் சொல்வதால் பிரச்சனைகள் உண்டு.

சிம்மம்

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மறதியால் விட்டுப்போன பணிகளை செய்ய முன்வருவீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

கன்னி

துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர்.

துலாம்

சேமிப்பு உயரும் நாள். பயணம் பலன் தரும். செல்வாக்கு மேலோங்கும். வருமோ, வராதோ என்று நினைத்த பணம் ஒன்று கைக்கு வரும். திருமணத்தடை அகலும்.

விருச்சிகம்

கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நாள். கண்ணியமிக்க நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

தனுசு

மதிநுட்பத்தால் மகத்தான காரியங்களைச் செய்து முடிக்கும் நாள். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு.

மகரம்

அலைபேசி மூலம் அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். திருமணங்கள் முடிவாகும்.

கும்பம்

இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். உறவு பகை பாராமல் உதவி செய்ய முன்வருவீர்கள். அரசியல் ஈடு பாடு அதிகரிக்கும். தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும்.

மீனம்

கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். அயல்நாட்டு நிறுவனங்களின் அழைப்பை ஏற்பது பற்றி யோசிப்பீர்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com