

சந்தித்தவர்களால் சந்தோஷம் கூடும் நாள். தைரியத்தோடும். தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
இனிய மாற்றம் இல்லம் தேடி வரும் நாள். சுற்றியிருப்பவர்களால் நன்மை உண்டு. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம்புரியாத கவலைகள் தோன்றும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.
மற்றவர்கள் பாராட்டும் விதத்தில் காரியமொன்றைச் செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு அனுபவம் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மனக்குழப்பம் ஏற்படும் நாள். வரவை விடச் செலவு கூடும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லை உண்டு.
அருகிலிருப்பவர்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை தொடருவீர்கள். உத்தியோகத்தில் இழந்த வேலை மீண்டும் கிடைக்கும்.
சொத்துகளால் லாபம் கிடைக்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
வரவு திருப்தி தரும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். அலுவலகப் பணிகளை துரிதமாகச் செய்து முடிப்பீர்கள்.
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். வியாபார விரோதம் விலகும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் இன்று கிடைக்கும்.
நினைத்தது நிறைவேறும் நாள். நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். முடங்கிக் கிடந்த தொழில் முன்னேற்றம் ஏற்படும்.
நன்மைகள் நடைபெறும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்துசேரும்.
வளர்ச்சி கூடும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். மறைமுகப் போட்டிகள் விலகும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.