Today Rasipalan: இன்றைய ராசிபலன் 20.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Rasipalan
Published on

மேஷம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வீண் விரயம் ஏற்படும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.

ரிஷபம்

உடன்பிறப்புகளின் உதவி கிட்டும் நாள். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

மிதுனம்

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வரவு திருப்தி தரும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோக மாற்றம் உறுதியாகும்.

கடகம்

தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். தொலைபேசி வழியில் நல்ல தகவல் கிடைக்கும்.

சிம்மம்

வசதிகள் பெருகும் நாள். உறவினர்களுக்கு கொடுத்து உதவுவீர்கள். பணிபுரியுமிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர்.

கன்னி

லாபகரமான நாள். செல்வாக்கு அதிகரிக்கும். உடன் பிறப்புகளின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

துலாம்

பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவெடுப்பீர்கள்.

விருச்சிகம்

நினைத்தது நிறைவேறும் நாள். ஆரோக்கியம் சீராகும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். வரவு போதுமானதாக இருக்கும்.

தனுசு

யோகமான நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

மகரம்

அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமையை அறிந்து கூடுதல் பொறுப்புக் கொடுப்பர்.

கும்பம்

தொழில் மாற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். உத்தியோகத்தில் தங்களிடம் கொடுக்கப்பட்ட வேலையை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

மீனம்

உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவம் நடைபெறும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். திரும்பிச்சென்ற வரன்கள் மீண்டும் வரலாம்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com