Today Rasipalan: இன்றைய ராசிபலன் 2.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு கல்யாண வாய்ப்புகள் கைகூடும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Rasipalan
Published on

மேஷம்

நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். வீடு, வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.

ரிஷபம்

யோகமான நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். நீண்டதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் கைகூடும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

மிதுனம்

இனிமையான நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

கடகம்

தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். மறைமுகப்போட்டிகளை முறியடிப்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

சிம்மம்

பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ் சேர்க்கும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். தொழிலில் லாபம் உண்டு. தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும்.

கன்னி

யோசித்து செயல்பட வேண்டிய நாள். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர்.

துலாம்

வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிடையும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். அரசுவழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.

விருச்சிகம்

வரவு இரு மடங்காகும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

தனுசு

முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும்.

மகரம்

அலைச்சல் அதிகரிக்கும் நாள். சொந்த பந்தங்கள் வழியில் சுபச்செலவுகளைச் செய்யும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கும்பம்

ஒற்றுமை பலப்படும் நாள். பழைய வாகனத்தைக் கொடுத்துப் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் ஏற்படும். மடல் மூலம் மகிழ்ச்சியான தகவலொன்று வரலாம்.

மீனம்

கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். பக்குவமாகப்பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com