

பராபவ ஆண்டு, ஆவணி-14 (திங்கள்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திருதியை காலை 9.16 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : ரேவதி மறுநாள் விடியற்காலை 4.26 மணி வரை பிறகு அசுவினி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
மகா சங்கடஹர சதுர்த்தி. சுபமுகூர்த்த தினம். திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் உற்சவாரம்பம், பெரியதங்கப் பல்லக்கில் புறப்பாடு கண்டருளல். தேவக்கோட்டை ஸ்ரீ அரங்கநாதர் புறப்பாடு. பெருவயல் ஸ்ரீ முருகப் பெருமான் உற்சவாரம்பம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவில் ஸ்ரீ மாணிக்க விநாயகர் தலங்களில் ஹோமம் அபிஷேகம்.
நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் தலங்களில் அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் தலங்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்.
மேஷம் - தாமதம்
ரிஷபம் - லாபம்
மிதுனம் - ஆசை
கடகம் - முயற்சி
சிம்மம் - வரவு
கன்னி - செலவு
துலாம் - உழைப்பு
விருச்சிகம் - ஊக்கம்
தனுசு - நன்மை
மகரம் - வெற்றி
கும்பம் - உற்சாகம்
மீனம் - சுகம்